அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,
தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாவது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை வாங்கியுள்ளதால், வெளிநாடுகளில் 'கேப்டன் மில்லர்' அதிக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.