'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழக பாஜக புகார் அளித்துள்ளது. சமீபத்தில் 'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே அந்த வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கவிட்டனர். வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்து விட்டதாக கூறி தமிழக பாஜக சார்பில் ஆந்திரா மாநில டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.