மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த இவர், ஒன்றிய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மாநிலங்களவைக்கு 2 வது முறையாக தேர்வாகி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போன்று குஜராத்திலிருந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.