

NDA கூட்டணியில் இணையும் தேமுதிக, பாமக?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அந்த கூட்டணி உறுதியானது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்த தேமுதிக மற்றும் பாமகவிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தேமுதிகவிடம் 9 சீட்டுகள் தருவதாக அவர் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், பாமகவில் இருக்கும் உட்கட்சி பிரச்சனையினால் பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நன்றி: நியூஸ் தமிழ்