அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமாரின் பிறந்த நாள்தான் அனுமன் ஜெயந்தியாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று ஏப்ரல் 12ஆம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அனுமன் புகைப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அனுமன் படத்தை வீடு அல்லது கடையில் உள்ள தெற்கு திசையில் வைத்தால் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.