நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக அறிவித்த பிறகே கூட்டத்திற்கு வருவேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இபிஎஸ் நிபந்தனை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசிய போது இபிஎஸ் இந்த நிபந்தனை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைவர்களை விமர்சித்த காரணத்தால், அண்ணாமலையுடன் இபிஎஸ்-க்கு மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. ஆகையால், நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக அறிவித்த பிறகே வருவதாக கூறியுள்ளார்.