தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் உறுப்பினரும் MLA-வுமான நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலையின் பெயர் பலகை மீது ஸ்கெட்ச் மார்கர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இதை செய்தது யார் என்ற தகவல் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.