கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து கணபதி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.