கிருஷ்ணகிரி ராசுவிதியில் அமைத்துள்ள அருள்மிகு துலுக்காணி மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த மாதம் 9-ம் மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 48 நாள்களுக்கு அம்மனுக்கு மண்டலாபிஷேகம் நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று நிறைவு நாளினை முன்னிட்டு புன்னிய நதிகளில் கொண்டுவரப்பட கலசங்களுக்கு யாகப் பூஜையில் வைத்து சிறப்பு யாகம் நடைப்பெற்ற இந்த யாகப்பூஜையின் ஆலய பிரதிஷ்டையாகம், வாஸ்து யாகம், பூர்ணாதியாகம் உள்ளிட்ட பல்வேறு யாகப் பூஜைகளும் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து குப்பக்கலசங்கள் மேளத்தாளங்களுடன் எடுத்து வரப்பட்டது. பின்னர் சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முளங்க ஸ்ரீ சித்தி வினாயகர் மற்றும் அருள்மிகு துலுக்காணி மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.