கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள பச்சிக்கானப்பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவில் சுமார் 400 காளைகள் கலந்து கொண்ட நிலையில் சீறிப்பாய் காளைகள் குறிப்பிட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி புலியரசி நந்திதேவன் என்கிற காளை முதல் பரிசை வென்றது. இதை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த யாராலமானோர் கலந்து கொண்டனர்.