தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் கொடியேற்றினார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.