கடுமையான முழங்கால் வலி காரணமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (பிப்., 02) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், முதலமைச்சரின் சிக்கபள்ளாபுரா மற்றும் ராமநகரா சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. முழங்கால் வலி தவிர முதலமைச்சர் சித்தராமையா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையில் வேறு பாதிப்பு ஏதும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.