அட்டகாசமான கடற்கரைகள், மழைக்காடுகள், உயரமான மலைகள், விதவிதமான பறவைகள் மற்றும் விலங்குகள் என இயற்கையின் சொர்க்கமாக காட்சியளிக்கிறது ரீயூனியன் தீவு. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவில் ஆப்பிரிக்கர்களும், பிரெஞ்சுக்காரர்களும் அதிகமாக வசிக்கின்றனர். உலகிலேயே யூரோ நாணயம் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரே தீவு இதுதான். தென் ஆப்பிரிக்காவில் இருந்து ரீயூனியனுக்கு நேரடியாக விமான சேவை உள்ளது.