மத்திய அரசு உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த திமுகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் தனியாக சுகாதாரத்துறைக்கு மட்டும் விதிவிலக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் அந்த துறைக்கான அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.