மத்திய பட்ஜெட் (2025-26) நேற்று (பிப்.01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. அதில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். “இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இனி வரி செலுத்த தேவையில்லை” என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “ஒருவர் சராசரியாக மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதித்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை" என்றார்.