கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட விராட்சிக்குப்பம் ஊராட்சியில் பதவியேற்ற நாள் முதல் விராட்சிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. செல்வி ராதாகிருஷ்ணன் இன்று வரை விராட்சிக்குப்பம் ஊராட்சியில் உள்ள கிராம பொது மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை அமைத்தல், தூய்மை பணி, போன்ற பணிகளை கிராம மக்களை நேரடியாகச் சென்று அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர். அவரது விடா முயற்சியின் காரணமாக பல வருடங்களாக பாழடைந்து கிடந்த ஊராட்சிமன்ற கட்டிடத்தை இடித்து தற்போது புது கட்டிடம் கட்ட சுமார் 22. 65 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கருவானூர் முதல் கூராக்கம்பட்டி வரை சுமார் 1. 400 கிலோ மீட்டர் தூரம் ஓரடடுக்கு ஜல்லி சாலையும், கருவானூர் முதல் தாதிநாயக்கன்பட்டி, வரை ஒரு அடுக்கு ஜல்லி சாலையும் அமைத்துள்ளார். மற்றும் தனி நபர் உறிஞ்சி குழி திட்டத்தின்கீழ் 330 பயனாளிகளுக்கு பணி முடிக்கப்பட்டது.
இன்று 2021-2022-ஆம் நிதி ஆண்டுக்கான மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதல் பணியாக கருவானூர் புதுரோடு இணைப்பு சாலை முதல் கூராக்கப்பட்டி தார் சாலை வரை 1-100 மீட்டர் தொலைவில் சுமார் 23-லட்சம் மதிப்பீட்டில் ஒரு அடுக்கு ஜல்லி சாலை அமைக்கவும். மற்றும் 4 தடுப்பணை கட்ட பூமி பூஜையும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. செல்வி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் வீரபத்திரன். ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபு. ஊராட்சி செயலாளர் சுரேஷ். மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் எமது பஞ்சாயத்திற்கு தேவையான அனைத்து அரசின் நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய செய்வதே எனது குறிக்கோள். பொதுமக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன். என்றும் மேலும் ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார். மக்களின் தேவை அறிந்து கிராமத்தின் கட்டமைப்பை சீர் படுத்தி ஊர்மக்களின் பாராட்டுகளை பெற்று வரும் விராட்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரின் பணி பாராட்டுக்குரியதே.