சாலையோரம் ஒதுங்கிய ஆமை

1123பார்த்தது
ஓசூரில் பெய்த கனமழை: சாலையோரம் மக்கள் நின்ற இடத்தில் ஒதுங்கிய ஆமை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று காலை ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென ஓசூர் பேரண்டப்பள்ளி, பத்தலப்பள்ளி, மோரனப்பள்ளி, குமுதேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

கனமழையால் சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்களை வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கி சென்றனர்.
இதனிடையே மழை காரணமாக பொதுமக்கள் சாலையோரங்களில் ஒதுங்கி நின்ற நேரத்தில் ஆமை ஒன்று ஒதுங்குவதற்கு இடம் தேடி பொதுமக்கள் நின்ற இடத்துக்கு வந்தது இதனை பார்த்த பொதுமக்கள் ஆமைக்கு இடம் அளித்தனர். பின்னர் அந்த ஆமை மழை விட்டபின் அங்கிருந்து நகர்ந்து சென்றது.

தொடர்புடைய செய்தி