கல்யாணத்துக்கும் கருமாரிக்கும் ஒரே தலைமை- இது காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் அலப்பறை

464பார்த்தது
கல்யாணத்துக்கும் கருமாரிக்கும் ஒரே தலைமை- இது காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் அலப்பறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி அனுமன்தீர்த்தம் அரசு உயர்நிலைப பள்ளிக்கு சொந்தமான மெய்யாண்டப்பட்டி கிராம சர்வே எண் 45/10 ல் அராஜகம் செய்பவர்களை அகற்ற கோரி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேகர் மற்றும் காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊர் ஊராகச் சென்று சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இன்னொருபுறம் ஊர் நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்படும் ஏழுமலை என்பவரது உறவினர்கள்
30 வருடங்களாக மெய்யாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களாகிய எங்களுக்கு தமிழக அரசு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரி அதேநாளில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் சாகும்வரை உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஒரே தலைமையில் இரண்டு போராட்டங்கள். இது ஊத்தங்கரைக்கு புதுசு. காட்டேரி ஊராட்சிமன்ற தலைவர் விஜயகுமார் யார் பக்கம்.?? என்பதே கேள்வி??

ஊர்நத்த நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர கோரி நடைபெறும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவாரா??

*30 வருடங்களாக வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு பட்டா வாங்கி தர போராடுவாரா??

தலைவர் யார் பக்கம் என்பதே தற்போதைய கேள்வி???

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி