பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம்.

74பார்த்தது
பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காட்டேரி ஊராட்சி உள்பட்ட பாவக்கல் கூர்ரோடில் இருந்து மேல் இலக்கம்பட்டி, ஒன்னகரை, ஆலமரத்தூர், கருத்தும்பட்டி வந்தடையும் 5கி. மீட்டர் தூரம் உள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மனிதர்கள் நடமாட முடியாத சாலையை மான்குமிகு தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காட்டேரி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி தலைமையில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. விவசாய தொழிலாளர் சங்க வட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் சுந்தரம் , ஆனந்த பாபு , வரதராஜ் பங்கெடுத்து கொண்டனர். இந்த கையேழு இயக்கத்தை விவசாய சங்க தலைவர் மணல் காடு இராமலிங்கம் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி