மெய்யாண்டப்பட்டி ஊர்நத்தம் அரசு பள்ளிக்கா?? 30 வருடங்களாக வசிக்கும் மக்களுக்கா?? குழப்பத்திற்கு காரணம் யார்??

176பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி அனுமன்தீர்த்தம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான மெய்யாண்டப்பட்டி கிராம சர்வே எண் 45/10* ல் உள்ள 5 ஏக்கர் ஊர்நத்த நிலத்தை ஆக்கிரமிக்க முயல்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேகர் மற்றும் காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில்
சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர் ஊராகச் சென்று சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டியும் வருகின்றனர். இன்னொருபுறம் ஊர் நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்படும் ஏழுமலை என்பவரது உறவினர்கள்
30 வருடங்களாக மெய்யாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களாகிய எங்களுக்கு தமிழக அரசு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரி அதேநாளில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் சாகும்வரை உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் இரண்டு போராட்டங்கள் ஒரே நாளில் நடைபெறும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் நேற்று காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இன்று வீட்டுமனை பட்டா வேண்டி போராடும் பொதுமக்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேகர் ஆகிய இருவர் மீதும் காட்டேரி ஊராட்சிமன்ற 7 வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி என்பவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருவரும் துண்டுபிரசுரம் வெளியிட்டதாக
புகார் அளிக்க வந்திருந்தனர். ஆனால் காவல் நிலையத்தில் புகாரை வாங்க மறுத்ததால் காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து புகாரளிப்பதற்காக மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையில் காட்டேரி ஊராட்சியில் நடப்பது என்ன???

ஊர் நத்த இடத்தில் 30 வருடங்களாக 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவது ஒரு மாதத்திற்கு முன்புதான் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததா??
அப்படி இருந்தாலும் 30 வருடங்களாக அங்கு வசிக்கும் மக்களுக்கு வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு, கொடுக்க காரணம் என்ன?? அரசு பள்ளியை தரம் உயர்த்துவதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் வாழ்வதற்கு வேறு ஒரு இடத்தை ஏற்பாடு செய்து தரலாமே.

ஊர் நத்த நிலத்தை அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி உதவுமாறு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு. திருமாவளவன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதங்களாக தொடர்கதையாகி வரும் மெய்யாண்டவர் நடத்த நிலை பிரச்சினைக்கு அங்கு வசித்து வரும் மக்களுக்கும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி