கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில், தேசிய தன்னார்வ இரத்த தான தினம் 2024 ஐ முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, அரசு மருத்துவக் கல்லூரி இரத்த மையம், உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தே. மதியழகன் இன்று (05. 10. 2024) துவக்கி வைத்து இரத்ததான கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.