கீழ்குப்பம் ஊராட்சியில் மாபெரும் கொரரான தடுப்பூசி முகாம்

63பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க 100% சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயமணி திருப்பதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி வசந்தா வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதில் கிராம செவிலியர் கலைச்செல்வி அங்கன்வாடி ஊழியர்கள் வனிதாமணி, விசாலாட்சி, சத்துணவு அமைப்பாளர் பழனியம்மாள், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ரேவதி மற்றும் ஊத்தங்கரை சுகாதாரத் துறையின் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி போட வரும் நபர்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை கணினி மூலம் பதிவு செய்து கொண்டனர். கீழ்குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி