கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எரிவாயு பாதுகாப்பு மற்றும் எரிவாயு சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். பெரியசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் எரிவாயு சிக்கனம் என்ற தலைப்பில் செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது. மேலும் மாணவர்கள் எரிவாயு சம்பந்தமாக கேட்ட வினாக்களுக்கு உரிய விளக்கமும் அளித்தனர். முன்னதாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கபட்டது.