டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்க உள்ளது. மேலும், அதிகபட்சாமாக ரூ.16,800 போனஸாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.