தருமத்தோப்பு கிராமத்தில் கன்று விடும் திருவிழா.

68பார்த்தது
தருமத்தோப்பு கிராமத்தில் கன்று விடும் திருவிழா!!
ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி. எம் தமிழ்செல்வம் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் சிவம்பட்டி ஊராட்சி
தருமத்தோப்பு கிராமத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும் திருவிழா
சிவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மனோகரன் தலைமையில் நடந்தது.
இத்திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்ட மன்ற உறுப்பினர் டி. எம் தமிழ்செல்வம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். இவ்விழாவில் கன்றுகள் வரிசையாக டோக்கன் வழங்கி கன்றுகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு வாடி வாசல் வழியாக ஒவ்வொரு கன்றுகளாக விடப்பட்டது , இதில் கன்றுகள் சீறிப்பாய்ந்து சென்றது. முதல் பரிசாக 50 ஆயிரம்,
இரண்டாம் பரிசு 35 ஆயிரம், மூன்றாம் பரிசு 25 ஆயிரம் உள்பட 23 பரிசு வழங்கப்பட்டது ஆறுதல் பரிசாக சில்வர் அண்டா சில்வர் குடம் குக்கர் ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வழங்கினர். இதில் தருமபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான கன்றுகள் கலந்து கொண்டனர் மத்தூர் காவல் துணை ஆய்வாளர் உள்பட ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி