ஊத்தங்கரை: எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்

58பார்த்தது
ஊத்தங்கரை அருகே மின்சார துறை அலுவலர்களின் அலட்சியத்தால் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த கமலாபுரம் கூட்ரோடு அருகே சாலை ஓரம் உள்ள இரண்டு மின்கம்பங்களில் உள்ள காங்கிரீட் சிமெண்ட் முற்றிலும் உதிர்ந்து கம்பி மட்டும் எழும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பங்கள் தனியார் பள்ளி அருகே உள்ளன. இந்த தனியார் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் மின்சார துறை அலுவலர்களுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் கவனிக்கவில்லை. 

சுமார் 5 ஆண்டுகளாக எழும்புக்கூடாக உள்ள இந்த மின்கம்பங்கள் தற்போது பெய்த கனமழையால் மிகவும் மோசமாக உள்ளன. உடைந்து விழுந்து உயிர்பலி வாங்கும் முன் இந்த இரண்டு மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி