கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊடேதூர்க்கம் , சானமாவு , தேன்கனிக்கோட்டை , தளி , வேப்பனப்பள்ளி, மற்றும் மகாராஜா கடை போன்ற இடங்களில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானை உள்ளது. இவை தவிர ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டு அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை சேதப்படுத்தியும் பயிர்களுக்கு காவல் இருக்கும் விவசாயிகளை தாக்கி கொள்ளும் நிகழ்வும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. நேற்றை முன்தினம் வேப்பனப்பள்ளி அருகே விளைநிலத்தில் இரவில் காவலில் இருந்த இரண்டு விவசாயிகளை ஒற்றை யானை தாக்கியது இதில் சம்பவ இடத்தில் சந்திரன் மற்றும் நாகராஜ் என்கிற இருவர் பலியாகினர்.
இதன் இடையே கிருஷ்ணகிரி அருகே ஆந்திரா மாநில எல்லை பகுதியில் உள்ள மகாராஜா கடை என்னும் கிராமம் அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக 3 குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இந்த யானை கூட்டம் கடந்த சில நாட்களாக இரவில் வனப்பகுதியை விட்டு உணவுகாக அருகே உள்ள மகாராஜா கடை கிராமங்களுக்கு நுழைந்து சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள நெல்பயிர்கள் , வாழைமரங்கள் , தக்காளி சொடிகள் , தென்னைமரங்கள் , மா மரங்கள் , மற்றும் சொட்டு நீர் பாசன குழாய்கள் போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தியும், சாப்பிட்டும் செல்கிறது. பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இளைஞர்கள் இரவில் தூக்கமின்றி மேளதாளத்துடன் தீ பந்தங்களை கொளுத்தியும் வனத்துறையினருடம் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக இதனால் சுமார் 30 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 50 லட்சம் மதிப்பிலான விளைப்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுக்கின்றனர்.
இதுதொடர்பாக பேசிய விவசாயி சாவித்திரி மிகுந்த சிரமத்திற்கு இடையே விவசாயம் செய்துவரும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டோர் இந்த ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்த நிலையில் காட்டுயானைகள் சாகுபடி செய்த பயிர்களை சேதம் செய்து வருவதாகவும் இதனால் கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் தள்ளப்பட்டு இருப்பதாகவும் அரசு உரிய நிவாரணம் வழங்கி காட்டு யானைகளை மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
விவசாயி சரவணன் கூறுகையில் இந்தப் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் சுமார் 30 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வாழை தக்காளி தென்னை மரங்கள் மாமரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி விட்டது இதனால் மிகுந்த சிரமத்தில் உள்ளோம் ஒரு ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் யானைகள் சேதப்படுத்தி விட்டதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.
மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டத்தை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றும் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.