கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் பணியாளர்கள் நேற்று(செப்டம்பர் 5) கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர்.
அப்போது, ஓசூர் நாமல்பேட்டை, ஜனப்பர் தெருவில் உள்ள கடைகளில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த ஆய்வின்போது தொழில் உரிமம் இன்றி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.