கிருஷ்ணகிரி மாவட்டம் குந்துக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை ஊராட்சி சொப்புகுட்டை கிராமத்துக்குள் புகுந்தன. இதையடுத்து வந்த யானைகள் எல்லப்பா, பச்சப்பா, காவேரியப்பா அகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து தக்காளி, வாழை, சாமந்தி ஆகியவற்றை கால்களால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.