ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் கார் மோதி 2 பேர் பலி

4052பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் கார் மோதியதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்டு ரோடு அருகில் தர்மபுரி சென்றுவிட்டு ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடதாம்பட்டி பகுதியை சேர்ந்த ரகு 50. அதே பகுதியை சேர்ந்த கௌரி வயசு 40, பேபி 55 , ஓட்டுநர் பழனி ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி 4 பேரையும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரகு மற்றும் பேபியம்மாள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓட்டுனர் பழனி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கௌரி கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரகு மற்றும் பேபியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி