கர்நாடக மாநிலம் பெங்களூரு கல்யான் நகர் எச்.பி.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் ராஜ் ரெட்டி (53). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவம் அன்று அவர் சிப்காட் போஸ்டாபிஸ் அலுவலகம் அருகில் நடந்து சென்றபோது அந்த வழியாகச் சென்ற கார் அவர்மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜ் ரெட்டியை அவரை அக்கம் பக்கத்தினர். மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.