போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வெல்லம் விற்பனை அமோகம்.

81பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வெல்லம் விற்பனை அமோகமாக விற்பனையகி வருகிறது. போச்சம்பள்ளி அதன் சுற்று வாட்டார பகுதிகளில் மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் திருவிழா நடந்து வருவதால் கோவிலுக்கு செல்லும் பெண்கள் மா விளக்கு தயாரிப்பதற்காக போச்சம்பள்ளி வாரச்சந்தையில் உருண்டை வெல்லத்தை வாங்கி செல்கின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது 60 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

தொடர்புடைய செய்தி