சூளகிரி: கன்டெய்னர் லாரியில் திடீர் தீ...!

82பார்த்தது
சூளகிரி: கன்டெய்னர் லாரியில் திடீர் தீ...!
ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நாற்காலிளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை தேனியை சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சூளகிரி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (22.08.2024) மாலை அந்த லாரி சென்ற போது சப்படி என்ற இடத்தில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென லாரியின் முன்பகுதி தீப்பற்றிக் கொண்டது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரி முழுவதும் சிறிய நேரத்தில் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனால் அந்த பகுதியில் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் ஓசூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர். சம்பவம் இடத்திற்கு வந்து குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.

இந்த விபத்தில் 1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் நாற்காலிகள் தீயில் கருகி சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி