சூளகிரி: லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்.

81பார்த்தது
சூளகிரி: லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்.
கேரள மாநிலம் கொச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பள்ளி என்ற இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த விவசாய நிலத்தில் தலைக்குப்புற லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி