கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த புட்டா மூப்பர் கொட்டாய்யை சேர்ந்த சம்பத் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளி கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய நேற்று செப்-23ம் தேதி தகவல் வந்தது.
இதை அடுத்து தாசில்தார் சத்யா, மண்டல துணை தாசில்தார் ரஹ்மத்துல்லா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ சம்வ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி கடத்துவது தெரியவந்தது.
மண் அள்ளிக்கொடிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்னர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வாகன உரிமையாளர்களான கவுண்ட னூர் சோமு (32) எம். ஜி. (30) ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசார ணை மெற்கொண்டு வருகிறார்கள்.