கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் போலீசார் ஜி. டி. குப்பம் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாந்தோப்பு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் பெரிய அகரம் பாபு (30) சத்யராஜ் (35) விஜி(40) சின்ன கன்னாலப்பட்டி கலைவாணன் (48), விஸ்வமங்கலம் பிரபாகரன் (37), ஜி. டி. குப்பம் பெருமாள் (44) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறு டூவீலர்கள் 6, 260 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.