சூறாவளி காற்றால் மின் கம்பங்கள்-புளியமரம் சாய்ந்து சேதம்.

66பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து இந்த நிலைகள் காற்றின் வேகம் தாங்காமல் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள ஏ. மோட்டூர் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இந்த 2மின் கம்பங்கள் உடைந்து மின் கம்பிகள் அருந்து கீழே விழுந்து சேதமானது. மேலும் அதே பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த 50 வருட பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது. இரவு நேரம் என்பதாலும் மழையின் காரணமாக அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

தொடர்புடைய செய்தி