போச்சம்பள்ளி அருகே சிப்காட் வளாகத்தில் உள்ள ரி சஸ்டநேபிலிட்டி சொல்யூஷன் லிமிடெட் என்ற வேஸ்டேஜ் நிறுவனத்தை மூட வலியுறுத்தி நேற்று 10-ம் தேதி பா.ம.கட்சி சார்பில் 100 க்கும் மேற்பட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மருத்துவ கழிவுகள், உள்ளிட்ட பல்வேறு கழிவுகளும் கொண்டு வந்து இங்கு எரிக்கப்படுவதாகவும் இதனால் சுற்றுப்புற கிராமங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக கூறி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டு கோசங்களை எழுப்பினர். கட்சியினர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.