பாரூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

62பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் ஊராட்சியில் உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று(ஆக.28) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரூர், செல்ல குட்டப்பட்டி, வீரமலை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமை காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி தொடங்கி வைத்தனர். முகாமில், பொதுமக்களிடம் இருந்து புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்புப் பெயர் மாற்றங்கள், கூடுதல் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி