போச்சம்பள்ளி: புரட்டாசி மாதம் எதிரோலியால் காய்கறிகள் அமோகம்.

52பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் இன்றுசெப்-22- தேதி காய்கறி காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் பிறந்ததால் பெரும்பாலானவர்கள் அசைவ உணவை தவிர்த்து, இம்மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவார்கள்.

கடந்த 17-ம் தேதி நாள் முதல் தொடங்கியதால் பொதுமக்கள் அசைவ உணவுக்கு மாற்றாக காய்கறிகள், காளான், பன்னீர், உள்ளிட்ட சைவ உணவை சமைக்க துவங்கியுள்ளனர்.

போச்சம்பள்ளி சந்தையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இயற்கையாக விளைவிக்கபடும் காய்கறிகளை விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வந்ததிருந்தனர். சற்று விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.

இதனால் காய்கறி வியபாரம் அமோகமாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி