குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழர்களின் விவரங்களைப் பெற்று மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள +91 1800 309 3793, +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 12) அதிகாலை குவைத்தில் இந்தியர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.