ஜெயக்குமார் மரண வழக்கு- விசாரணை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

50பார்த்தது
ஜெயக்குமார் மரண வழக்கு- விசாரணை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி மற்றும் ஐஜி நேரில் விசாரணை நடத்த உள்ளனர். வழக்கு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்த இன்று மதியம் நெல்லைக்கு வருகை தரும் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி