கர்நாடகா மாநிலம் ராமநகராவில், தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திச் சென்ற தர்ஷன் என்ற இளைஞர், சிறுமியின் தந்தை சந்தோஷிடம், ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து, காவல்துறையில் புகாரளித்த சந்தோஷ் அப்பகுதி இளைஞர்களுடன் தனது மகளை தேடிய போது, குழந்தை வாய், கை மற்றும் கால்கள் டக்ட் டேப்பால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அதன்பின் தர்ஷன் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.