சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ரஹிமை விடுவிக்க ரூ.34 கோடி நிதியை மலையாளிகள் திரட்டியுள்ளனர். 2006ம் ஆண்டு சவுதி சென்ற ரஹிம், மாற்றுத்திறனாளி சிறுவனின் உடல் நிலையை சீராக வைக்கும் இயந்திரத்தை தவறுதலாக தட்டிவிடவே, அச்சிறுவன் உயிரிழந்தார். இதற்காக ரஹிமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. Blood Money எனும் குற்றத்திற்கு இழப்பீடாக பணம் பெறும் முறையை குடும்பத்தினர் ஏற்கவே, 6 மாதத்தில் ரூ.33.24 கோடி செலுத்த நேரிட்டது.