பள்ளிக் குழந்தைகளின் புத்தகப்பை சுமைகளுக்கு தீர்வு காண கேரள அரசு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, 1-ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் பராமரிக்க வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும். மேலும், மாதத்திற்கு குறைந்தது 4 நாட்களுக்கு அரசுப் பள்ளிகளில் புத்தகப்பை இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.