காஷ்மீர் தாக்குதல்: டிரோன்களுடன் தேடுதல் வேட்டையில் ராணுவம்

81பார்த்தது
காஷ்மீர் தாக்குதல்: டிரோன்களுடன் தேடுதல் வேட்டையில் ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் ஷிவகோடாவில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பேருந்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது ராஜோரி, பூஞ்ச், ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாத குழு என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஷிவகோடா கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை ராணுவம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன. மேலும் பறக்கும் ட்ரோன்கள் மூலமாக காயமடைந்தவர்களை மீட்கும் பணியிலும், தீவிரவாதிகளை பிடிக்கும் பணியிலும் ராணுவம் இறங்கி உள்ளது.

தொடர்புடைய செய்தி