இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் இருப்பவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். இவர் ஸ்கை டைவிங் செய்து கொண்டு காற்றில் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக, அவரது பயிற்சியாளர் ஷெல்டன் மெக்ஃபார்லேன் அவரைக் காப்பாற்ற வேலையில் ஈடுபட்டுள்ளார். சுமார் 4,000 அடி உயரத்தில் பயந்துகொண்டு இருந்த போது பாராஷூட் ரிப் கார்டை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை உயிரை காப்பாற்றி கீழே கொண்டு வந்துள்ளார்.