பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்திரா என்ற பெண் தனது குடிகார கணவன் வங்கியில் வாங்கிய கடனை வசூலிக்க வந்த ஏஜெண்ட்டுடன் சென்று திருமணம் செய்துகொண்டார். கணவன் குடிகாரன் என்பது திருமணத்திற்கு பிறகே இந்திராவுக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே வங்கியில் கடனும் வாங்கியிருந்துள்ளார். கடனை வசூலிக்க வந்த பவன் குமாருடன் இந்திராவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.