தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றிப் பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கு என்று இருக்கிறோம். ஆனால், 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சினிமா வேறு, அரசியல் வேறு என்று மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். இதனால் வெற்றி பெறும் அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டுகள் இல்லை” என்றார்.