பெண்ணை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

55பார்த்தது
பெண்ணை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி நளினி (31). இவர் தனது கணவருக்கு தெரியாமல் கடந்த 5 வருடங்களாக சின்ன கவுண்டம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த சக்திவேல் கண்டித்ததன் பேரில் திரும்பி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தோகைமலை பஜாஜ் ஷோரூம் அருகே நின்று கொண்டிருந்த நளினியிடம் பழகிய போது கொடுத்த பணத்தை கேட்டு கையாலும் காலாலும் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தோகைமலை அரசு மருத்துவமனையில் நளினி சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தோகைமலை போலீசார் கருப்பசாமி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி